மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. இப்படியொரு சேஞ்சா! இதுவும் வேற லெவலில் இருக்கு! ஆண்ட்ரியா வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்.! குவியும் லைக்ஸ்!!
சினிமா துறையில் துவக்கத்தில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் நடிகையாக அவதாரமெடுத்து சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மங்காத்தா, விஸ்வரூபம், விஸ்வரூபம்2, வடசென்னை, துப்பறிவாளன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
நடிகை ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் கா, பிசாசு 2 போன்ற படங்களில் முன்னணி ரோலில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் அவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா பாடல் ' பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி செம ஹிட்டானது. ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது அனல் மேலே பனித்துளி என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அவர் அதன் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிகவும் ஹோம்லியாக சுடிதார் அணிந்த அழகான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.