மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. அவரா இது! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிபோன ஜீவா பட நடிகை! எப்படி மாறி போயிட்டாரு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இதில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அனுயா. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
அதனை தொடர்ந்து அவர் மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. மேலும் அதனை தொடர்ந்து அனுயாவிற்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் அவர் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறினார். சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அனுயா அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது என பிசியாக உள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அனுயா ஆள் அடையாளமே தெரியாமல் ஆன்ட்டி மாதிரி இருப்பதாக கூறி வருகின்றனர்.