மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. மெட்ராஸ் பட நாயகியா இது! என்ன இப்படி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிட்டாரே! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விஷால் நடிப்பில் வெளிவந்த கதகளி, கலகலப்பு 2, ஆர்யாவுடன் கடம்பன், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கதாநாயகன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் அவர் தமிழில் இறுதியாக சித்தார்த்துடன் அருவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் வராத நிலையில் அவர் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார். மேலும் அங்கு மிகவும் கவர்ச்சியாக நடித்து வரும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
இந்நிலையில் கேத்ரின் தெரசா நடிப்பில் தற்போது பால தந்தனானா என்ற தெலுங்கு படம் உருவாகியுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அவர் கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் சேலை அணிந்து வந்துள்ளார். அவரைக் கண்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். ஏனெனில் அவர் நன்கு உடல் எடை அதிகரித்து கும்மென ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.