மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. என்னே அழகு.. தேவதையாக ஜொலித்த திஷா பதானி; வைரல் போட்டோஸ் உள்ளே.!
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் திஷா, இன்று லக்மே பேஷன் வீக் 2023 நிகழ்ச்சியில் அட்டகாசமான ஆடை அணிந்து வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
வெளிர் நிறத்திலான பிளங்கிங் நெக் ப்ளவுஸ், லெஹன்கா செட் ஆகியவற்றை அணிந்து நடந்து வந்தபோது, அங்கிருந்த பலரும் ஆச்சரியப்பட்டு அவரின் அழகில் மயங்கிப்போயினர்.
அவர் அந்த போட்டியின் சிறந்த அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து திஷா பேசுகையில், "எனக்கு வடிவமைத்து கொடுக்கப்பட்ட ஆடை வசதியாக இருந்தது. அந்த ஆடை என்னை காதல் வயப்பட்ட வைத்தது. இனிமையான ஆடையை நான் அணிந்துகொண்டேன்" என தெரிவித்தார்.
திஷா தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்த யோதா திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 08 அன்று வெளியாகிறது. அதனைத்தொடர்ந்து, பிரபாஸின் கல்கி திரைப்படத்திலும் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.