மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நண்பன் பட நடிகை கர்ப்பமா?? புகைப்படத்துடன் அவரே சொன்ன குட்நியூஸ்!! வாழ்த்தும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் காலடி பதித்தவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து அவர் மீண்டும் தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார். அவர் தற்போது பாலிவுட்டில் அன்ஃபேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை இலியானா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டி குழந்தையின் டி-ஷர்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த டி-ஷர்டில் சாதனைப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் நடிகை இலியானா விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் அவரது காதலர் யார் எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.