செகண்ட் மேரேஜ் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல., அவன் போட்டோவ யூஸ் பண்ணாதீங்க - நடிகை காஜல் பசுபதி வேண்டுகோள்.!



Actress kajal pasupathi request to media peoples

 

தமிழ் திரையுலகில் பிரபல நடன பயிற்சி கலைஞராக வலம் வந்தவர் சாண்டி மாஸ்டர். இவர் சமீபத்தில் லியோ திரைப்படத்தின் வாயிலாக நடிகராகவும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தார். 

அப்படத்தில் சிறிய அளவிலான கதாபாத்திரத்தில் சாண்டி நடித்திருந்தாலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இவர் தனது முதல் மனைவி காஜல் பசுபதியை விவாகரத்து செய்தார். 

cinema news

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு செல்வியா என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்கினார். இருவருக்கும் குழந்தைகளும் இருக்கின்றனர். 

இந்நிலையில் முதல் மனைவியான காஜல் பசுபதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். 

cinema news

இதுகுறித்து பல ஊடங்கங்களும் செய்து வெளியிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை, ஊடகங்களை குறிப்பிட்டு ஒரு தகவலை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த தகவலில், "இன்னும் ஆரமிக்கவே இல்ல. அதுக்குள்ள முடிந்த செகண்ட் மேரேஜ்னு போட்டு இருக்கீங்க. எதுக்கு அனைத்துக்கும் அவன் புகைப்படத்தை உபயோகம் செய்கிறீர்கள். அவனை வாழ விடுங்கயா" என்று தெரிவித்துள்ளார்.