பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வெறும் ரூ.500-உடன் வந்து படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை.. அதுவும் போனால் அவ்வளவுதான்..! அவரே கூறிய உண்மை..!!
பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கங்கனா ரணாவத். இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கும் நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் தனது ஆரம்பகால வாழ்க்கை தொடர்பாக மனம்திறந்து பேசியுள்ளார்.
அதில் இவர் மும்பைக்கு திரைப்பட வாய்ப்பு தேடிவரும் போது தனது கைகளில் இருந்த 500 ரூபாயுடன் வந்ததாகவும், பின் நாட்களில் கஷ்டப்பட்டு முன்னேறி தற்போது இந்த நிலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திராகாந்தி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டவரும் எமர்ஜென்சி படத்தை இவர் இயக்கி தயாரித்து வரும் நிலையில், இதற்காக அந்த பணம் மொத்தத்தையும் செலவிட்டு இருக்கிறார். இதில் இழப்பு ஏற்பட்டால் நான் எனது ஆரம்பநிலைக்கு வருவேன். ஆரம்பநிலைக்கு வந்தாலும் சொந்த காலில் நிற்பேன்" என்று கூறியுள்ளார்.