மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. நம்ம எதிர்நீச்சல் ஈஸ்வரிக்கு என்னாச்சு?? இப்படி இருக்காரே! வெளியிட்ட புகைப்படத்தால் பதறிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அந்த படத்தைத் தொடர்ந்து அவர் சேரன் நடிப்பில் ஆட்டோகிராப், அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு, எதிரி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகை கனிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி, டிஆர்பியில் முன்னணி வகிக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடரில் அவர் நன்கு படித்துவிட்டு, திருமணத்திற்கு பின் கணவருக்கு அடங்கியிருக்கும் குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கனிகா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், ஒரு வாரம் முடிந்துள்ளது. இன்னும் 5 வாரங்கள் உள்ளது. புதிய பூட்ஸ் உடன் நடக்க கற்று வருகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் கூறி வருகின்றனர்.