#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை கவுசல்யா இனிமேல் சினிமாவில் இப்படி தான் வருவார்!
தமிழ் சினிமாவில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது.
அவர் நடித்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை கவுசல்யா. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அடுத்ததாக லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார் கவுசல்யா. பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார்.
கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த கவுசல்யா, நட்பே துணை படத்திற்குப் பிறகு தொடர்ந்து அம்மா வேடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். நட்பே துணை படத்தில் நடிகை கவுசல்யாவிற்கு அம்மா வேடம் மிகவும் அழகாக பொருந்தியது. இனிமேல் இவர் அம்மா ரோல்களில் அதிகம் வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.