மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்...
90களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிகழ்வு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகை மீனா கூறுகையில் எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசாதீர்கள் என கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது கதைகளை தேர்வு செய்வதில் தான் கவனத்தை செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.