மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HBDNayanthara: சோதனைகளை சாதனையாக்கிய நாயகி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.!
தமிழ் திரையுலகில் பல கஷ்டங்கள், ஏச்சுகள், பேச்சுக்கள் போன்றவற்றை கடந்து திரையில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நாயகி நயன்தாரா. இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவரின் நடிப்பை பார்த்து வியந்துபோன கூட்டம் தான், அவருக்கான ஆதரவாளர்களாக இன்றுவரை இருந்து வருகிறது.
2003 ல் இருந்து இன்று வரை 38 வயது ஆனாலும் கதாநாயகியாக ஜொலித்து வரும் நயன்தாரா, தற்போது வரை உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். கடந்த 2005ல் ஹரியின் அய்யா திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ரஜினிகாந்துக்கும் - நயன்தாராவிற்கு தந்தை மகள் போன்ற பாசப்பிணைப்பு உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில், நயன்தாராவின் திருமணத்தில் ரஜினிகாந்த் முக்கியஸ்தராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. திரையில் பல சாதனைகளை வென்றெடுத்த நாயகி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்து இன்று 2 குழந்தைகளுக்கு தாயகி இருக்கிறார்.
தொடர்ந்து திரையில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ள நிலையில், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு தனது பணியையும் செய்து வருகிறார். தற்போது வரை அவர் 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவராவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரையுலகில் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதேபோல, மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சோதனைகளை சாதனையாக்கி இன்று உலகளவில் ஜொலிக்கும் நாயகி நயன்தாராவிற்கு பிறந்தநாள்.