திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா... வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. இவ்வுளவு கோடிக்கு அதிபதியாம்.!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நயன்தாரா, இன்று வரை உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இவர் இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். அந்த வகையில், படத்திற்கு ரூ.10 கோடி வரையிலும் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு ரூ.165 கோடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருக்கும் ரூ.100 கோடி மதிப்பிலான வீடு, சொந்த விமானம், சொகுசு கார்கள் போன்றவையும் நயன்தாராவிடம் இருக்கின்றன.