திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆன்மீக பயணம்... கணவருடன் கோயில் கோயிலாக நடிகை நயன்தாரா தரிசனம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் வாடகைதாய் மூலம் இரட்டை ஆண்குழந்தைக்கு பெற்றோர் ஆனர்.
தங்கள் மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் சூட்டியுள்ளனர்.
பிசினஸிலும் பிசியான நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மேலும் நடிகை நயன்தாரா சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் செம பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வபோது தனது பிசினஸ் குறித்த மற்றும் மகன்களுடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்வார்.
இதையும் படிங்க: அச்ச்சோ.. எவ்ளோ கியூட்.! மத்தளமான தலை.! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.! வீடியோ...
கணவருடன் ஆன்மீக பயணம்
நடிகை நயன்தாரா தனது கணவருடன் தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் கன்னியாக்குமரி சென்ற அவர்கள் அங்கு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியிலும் தரிசனம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில் நயன்தாரா வரும் செய்தி அறிந்த ரசிகர்கள் கோவிலில் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: நடிகை நயன்தாராவின் மண்ணாங்கட்டி 1960 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு; வெளியீடு பணிகள் தீவிரம்.!