#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட ஏங்க?.. சர்ச்சைக்கு பயந்து இப்படி பண்ணிட்டீங்களே..! நடிகை ராஷிக்கண்ணா எடுத்த திடீர் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளுள் ஒருவர் ராஷிகண்ணா. இவர் பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினாலும், தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பலபடங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்திவிராஜ் சுகுமாரின் பிரம்மம் என்ற மலையாள படத்திலும், தமிழில் திருச்சிற்றம்பலம் படத்திலும், தெலுங்கில் பக்கா கமர்சியல் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதன் பின் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக "தென்னிந்திய படங்கள் பெண்ணுடலை புறநிலைப்படுத்துகின்றன" என ராஷிகண்ணா கருத்து தெரிவித்த நிலையில், அது சர்ச்சையை உருவாக்கியது.
அதனால் ராஷிகண்ணா "தென்னிந்திய சினிமாவில் என்னைப் பற்றிய சில தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. யாராக இருந்தாலும் கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் ஸ்டாப். நான் நடிக்கும் ஒவ்வொரு மொழி படத்திலும் எனக்கு மரியாதை உண்டு. அன்பாக இருப்போம்" என்று கூறியிருந்தார்.
அத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் "எனது ட்விட்டர் கணக்கை செயலிழப்பு செய்துவிட்டேன். இனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்வேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் சர்ச்சைக்கு பயந்து இப்படி பண்ணிட்டீங்களே என சோகத்துடன் கூறி வருகின்றனர்.