மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி அந்த மாதிரி வேலை பண்ண முடியாது என கதறி அழுத அந்நியன் பட நடிகை சதா.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான சதா முதன்முதலில் 2002 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான 'ஜெயம்' படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
முதல் படமான 'ஜெயம்' மிகப்பெரிய ஹிட்டாகி இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதன்பின் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் சதா எதிரி, வர்ணஜாலம், அன்னியன், பிரியசகி, திருப்பதி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பு திறமை பாராட்டப்பட்டாலும் கதை தேர்வு சரியாக இல்லாததால் படங்கள் தொடர் தோல்வி அடைந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. கடைசியாக வடிவேலுடன் இணைந்து 'எலி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில், மும்பையில் இடம்பெயர்ந்த சதா அங்கு "எர்த்லிங் ஸ்கேப்" என்ற கஃபே ஒன்று நடத்தி வந்தார். தற்போது அந்த இடத்தின் ஓனர் காலி செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்து போன சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இத்தனை வருஷம் கடின உழைப்புடன் கபேயை விட்டுட்டு போக கஷ்டமா இருக்குது என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.