மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்பாக்கவே இல்ல.. சமந்தாவிற்கு வந்த அரியவகை நோய்.. நினைத்தைவிட ரொம்ப மோசம்..! தப்பிக்க இயலுமா?..!!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா. இவர் மயோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இது உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் என்றும் கூறப்படுகிறது. மயோசிட்டிஸ் நோயின் அறிகுறியாக காய்ச்சல், உடல் எடை குறைவு, மூட்டு வலி, தசைகளில் வலி, மயக்கம் போன்றவையும் ஏற்படும்.
இந்த நோயின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர் எழுந்து நடக்க அதிக சிரமத்திற்கு உள்ளாகுவர். நோயின் தாக்கம் தீவிரமாகும் பட்சத்தில் அமர்ந்திருக்கும் போதும் எழுந்து நிற்கவும், உறங்கும்போது தனது நிலையை மாற்றவும் பெரும் சிரமத்திற்குள்ளாகுவர் .
இந்த பாதிப்பு உடலில் இருக்கும் பிற தசைப்பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. உணவுகளை சாப்பிட முடியாமலும் அவதிப்படுவர். அதனை தடுக்கவும் எந்த வழியும் இல்லை என்பதால் இயற்கையாக அது குணமடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இவை பெண்களை அதிகம் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை இருந்தால் மூட்டுவாத நிபுணரை அணுகி சிகிச்சை பெறவேண்டும் என்றும், உடலில் பலவீனம், தொடை, தோள்பட்டை பலவீனம் இருந்தால் இதன் அறிகுறி என்றும் கூறப்படுகிறது.