"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
#BigNews: நடிகை சமந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியா?.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ள prapalamana நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதை தொடர்ந்து, சமந்தா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின்னர் புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இருந்தார்.
தற்போது அவர் யசோதா என்ற படத்தில் நடித்து வந்த நிலையில், அதற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த நோயை எதிர்த்து போராடி நான் வெற்றி பெறுவேன் என அவர் ரசிகர்களிடம் கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகியிருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால், நடிகை சமந்தா ஹைதராபாத் நகரில் இருக்கும் அவரின் வீட்டில் இருப்பதாகவும், அவர் குறித்து பரவிய செய்தி வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.