திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனுஷின் வாத்தி பட நடிகையா இது? இணையத்தை சூடேற்றும் புகைப்படங்கள்!
தனுஷூடன் வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காலம் முதல் தற்போதைய காலம் வரை மலையாள சினிமா உலகில் இருந்து தான் தென்னிந்திய சினிமாக்களுக்கு நடிகைகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன்.
இவர் இவர் தனது பெயருக்கு பின்னால் மேனன் என்ற சாதி பெயரை நீக்கியதற்காக ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து அப்போது பேசிய அவர், வாத்தி படத்தில் இருந்து பெயரை மாற்றிக் கொண்டேன். சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தால் போதும் என தெரிவித்திருந்தார்.
முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களையே மிகவும் பிரபலமானார். ஆனால் இவருக்கு வாத்தி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இன்னும் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில் புதிய திரைப்படங்களில் எதிலும் அவர் ஒப்பந்தமாகாததால், தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் தன்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்து இதுவரை அவர் எந்தவித பதிவும் செய்யவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். திரைப்படங்களில் குடும்ப பெண்ணாக நடித்திருந்தாலும், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வரும் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.