மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் பட நடிகை ஸ்ரேயாவா இது.? இவ்வளவு அழகா இருக்காங்களே.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் திரை துறையில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். முதன் முதலில் தெலுங்கு மொழியில் 'இஷ்டம்'என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்குப் பின்பு தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரேயா சரண், தமிழில் முதன் முதலில் 'உனக்கு 20 எனக்கு 18' என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனை அடுத்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி, உத்தம புத்திரன், போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதன்பின் இவர் நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வந்ததால் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதளவில் கிடைக்கவில்லை. இதனை அடுத்த தனது ரஷ்ய காதலரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகிவிட்டார். சிறிது பிரேக்கிற்கு பின்பு மீண்டும் திரைத்துறையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பிஸியான நடிகையாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் முன்னழகை முழுவதுமாக காட்டி போட்டோஷூட் செய்து அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் மீண்டும் ஹிரோயினா நடிக்க போறீங்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.