திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் நிச்சயமாக கொலையே! டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்!
பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன என்று கேரளா சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் விளங்கிய டாக்டர் உமாநாத் கடந்த வாரம் புதன்கிழமை அன்று காலமானார். இந்நிலையில், மறைந்த உமாநாத்தின் நண்பரான டிஜிபி ரிஷிராஜ் சிங், அவருடனான நினைவுகளைப் பகிரிந்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் உமாதாதனிடம் அதுபற்றி கேட்டபோது அதில் பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன. இந்தநிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து டாக்டர் உமாநாத் கூறியதை, ரிஷ்ராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும், வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் நடிகை மூழ்கி உயிரிழந்திரக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.