#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நடிகை சுகன்யாவிற்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா! நீங்க பார்த்துருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சுகன்யா. இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் சின்னகவுண்டர், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சுகன்யா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
நடிகை சுகன்யாவிற்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவர் பிள்ளைகளை சினிமா சாயல் படாமலே வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில்
சமீபத்தில் சுகன்யா தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் சுகன்யா மகளா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.