மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாள் கொண்டாடிய புது கண்ணம்மா! என்ன.. அவருக்கு இத்தனை வயசுதான் ஆகுதா??
மக்களின் பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு தற்போது அதிரடி திருப்பங்களுடன், நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் முக்கிய கதாநாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் ரோஷினி தொடரை விட்டு விலகினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
இவரும் பார்ப்பதற்கு ரோஷினி போலவே இருப்பதால் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர். மேலும் வினுஷாவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் அவர் தற்போது தனது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அத்தகைய புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் வினுஷாவிற்கு தற்போது 23 வயதுதான் ஆகிறதாம்.