திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா! இது உடம்பா இல்ல.. வில்லாக வளைந்து இளசுகளின் இதயங்களை நொறுக்கிய நடிகை அதுல்யா ரவி! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் அதுல்யா ரவி. அவர் தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் அவருக்கு படவாய்ப்புகளும் குவிய துவங்கியது.
இந்நிலையில் கோவையை சேர்ந்த அவர் பின்னர் அடுத்தடுத்தாக கதாநாயகன், நாடோடிகள் 2 , நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, ஏமாளி, கேப்மாரி என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்த அதுல்யா ரவி தற்போது சிறிது கவர்ச்சிக்கு தாவியுள்ளார். மேலும் அதுல்யா ரவி தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அவ்வப்போது விதவிதமான உடைகளில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடம்பை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.