"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
அளவான கவர்ச்சியில் அம்சமான க்ளிக்ஸ்! ஜோர்டன் நாட்டில் ஐஸ்வர்யா மேனன் ஜாலி ட்ரிப்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்ட குடும்பத்தைச் சார்ந்த இவர் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தவர். உயர்கல்வியை சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். '
காதலில் சொதப்புவது எப்படி'? என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 'தசவலா' என்ற கன்னட திரைப்படத்தில் இவர் நடித்த மனநலம் குன்றிய பெண்ணின் கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. மலையாள முன்னணி நடிகரான பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான 'மான்சூன் மேங்கோஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
சில நாட்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத் தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமூக வலைதளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை. தன் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள், முக்கிய தருணங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் இடங்கள் ஆகியவற்றை ரசிகர்களுடன் சமூக வலைதளம் வாயிலாக அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
தற்போது நடிகை ஐஸ்வர்யா மேனன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலமாக பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். அளவான கவர்ச்சியில் அம்சமாக இருக்கும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களை கண்ணிமைக்காமல் ரசித்து வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.