#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடவுளுக்கு ரொம்ப நன்றி! ஐஸ்வர்யா ராய் வீட்டில் நடந்த கோலாகல கொண்டாட்டம்! செம ஹேப்பியில் குடும்பத்தார்கள்!
1994 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் வெற்றி பெற்று, பட்டத்தை கைப்பற்றியவர் ஐஸ்வர்யா ராய். அதனைத் தொடர்ந்து இருவர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் அவர் பாலிவுட் சினிமாவிலும் பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். அவரது 9வது பிறந்தநாள் சமீபத்தில் அவரது வீட்டில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அத்தகைய க்யூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஐஸ்வர்யாராய் எனது வாழ்வில் முழு அன்புக்குரிய எனது தேவதை ஆராத்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் மீது எனது வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடற்ற எல்லையற்ற அன்பு செலுத்துவேன். என்னுடைய வாழ்வில் உனக்கான எனது ஒவ்வொரு சுவாசிப்புக்கும் கடவுளுக்கு நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.