ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா எமி ஜாக்சன்?? அந்த பிரபலம் மாதிரியே இருக்காரே.! புகைப்படத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து அவர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானார். பிரிட்டன் நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகையும் மாடலுமான எமி ஜாக்சனுக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உருவாகினர்.
திருமணத்திற்கு முன் அம்மாவான எமி
இவர் ஆங்கிலம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்தார். நடிகை எமி லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த அவருக்கு அழகான ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், எமி நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "காந்திவழியில நீங்க, நேதாஜி வழியில நான்" - அனல் பறக்கும் வசனத்துடன், ஆக்சன் காட்சிகள்.. இந்தியன் 2 ட்ரைலர் இதோ.!
வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இப்புகைப்படத்தில் எமி அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக உள்ளார். மேலும் அவர் பார்ப்பதற்கு ஏஞ்சலினா ஜோலி போல உள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் எமி ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மதராசபட்டினம், ஐ படங்களிலேயே அவர் மிகவும் அழகாக இருந்ததாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கூலி... சூப்பர் ஸ்டாருக்காக லோகேஷ் போட்ட திட்டம்.!! வெளியான சுவாரஸ்யமான தகவல்.!!