மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் வழியில் செல்கிறாரா ஆர்யா.? மே 1 அன்று ஆர்யா 35 வது பட அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான சர்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் மிகப்பெரிய வெரிட்டியை பெற்றது. இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான கேப்டன் என்ற திரைப்படம் தோல்வியை தழுவியது.
தற்போது முத்தையா இயக்கத்தில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் மதகஜராஜா என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்யாவின் மபத்தி 35வது திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஆர்யாவுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளார். திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு மிஸ்டர் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் என்பவர் இயக்க உள்ளார். திபு தாமஸ் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க தன்வீர் மிர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார் . பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது