குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"திருமணத்திற்கு முன்னதாக உறவு வைத்துக் கொள்வது அவர்களது உரிமை" சர்ச்சையை கிளப்பிய அதுல்யா ரவி..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அதுல்யா ரவி. முதன் முதலில் ஷார்ட் பிலிம் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதன் பிறகு 'காதல் கண் கட்டுதே' எனும் திரைப்படத்தில் இவரது க்யூட்டான நடிப்பும் ,அழகுதிறமையும் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்திற்குப் பின்பு கேப்மாரி, ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மேலும் 'மீட்டர்' எனும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் அதுல்யா.
இது போன்ற நிலையில், அதுல்யா திருமணத்திற்கு முன்பான லிவிங் ரிலேஷன்ஷிப் போன்ற உறவை பற்றி ஒரு பேட்டியில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மேலும் அதில் பல ஆபாசமான கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அதுல்யா.
அப்பேட்டியில் கேட்கப்பட்டதாவது, "வெர்ஜினிட்டியை எத்தனை வயதில் இழக்க வேண்டும் என்ற கேள்விக்கு 21 முதல் 25 வரை என்று பதிலளித்துள்ளார். திருமணத்திற்கு முன்னதாக உடலுறவு கொள்வது சரியா என்ற கேள்விக்கு திருமணத்திற்கு பிறகான உடலுறவு கொள்வது தான் சரி .ஆனால் தற்போது திருமணத்திற்கு முன்னதாகவே சிலர் உடலுறவு கொள்கின்றனர். மேலும் சிலர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர். இது அவர்களது தனிப்பட்ட உரிமை யாரும் கேட்கக் கூடாது" என்று கூறியிருக்கிறார்.