96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பேபி சாராவா இது.! அவர் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு கடந்த 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் தெய்வத்திருமகள். அப்படத்தில் விக்ரமின் மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் பேபி சாரா.
இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து அவர் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு போன்ற நடித்துள்ளார். மேலும் அண்மையில் வெளிவந்த பிரமாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சாரா கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் புகைப்பிடிக்கும்படி சில காட்சிகளில் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதனைக் கண்ட பலரும் பேபி சாரவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.