பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. பிக்பாஸ் பாலாஜிக்கு ரகசியமாக திருமணமாகிருச்சா?? மணப்பெண் யாரு? அவரே பகிர்ந்த புதிய வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் நிகழ்ச்சியில் தனது எடக்குமடக்கான செயல்களால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டைட்டில் வின்னரானார். தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் ஆல்பம், விளம்பரங்கள் மற்றும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஏப்ரல் 1 நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், ரசிகர்களுக்கு அதனை கூற மறந்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் உண்மையிலேயே அவருக்கு ரகசிய திருமணமாகிவிட்டதா? அல்லது பட புரோமோஷன், விளம்பர படங்களில் நடித்ததா? என குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து, ' உங்களுடைய வேண்டுகோளின்படி இந்த புதிய வீடியோவை வெளியிட்டுள்ளேன். இதுதான் எனது திருமண வீடியோ. ஆனால் இது ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ, ஏப்ரல் 1’ என கூறி தனக்கு உண்மையிலேயே திருமணம் நடைபெறவில்லை என உறுதி செய்துள்ளார்.