#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி.. கண்ணம்மாவா இது! புடவையில் என்னா குத்தாட்டம் போட்டுள்ளார் பார்த்தீங்களா! ரசிகர்களை வாயடைக்கவைத்த வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்தத் தொடரில் ஹீரோவாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் அருண் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் பயங்கர வில்லியாக பரினா நடித்து வருகிறார். மாடலிங் துறையை சேர்ந்த ரோஷினி இத்தொடரில் அடக்கமான, அமைதியான, எளிமையான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார். இந்நிலையில் அவர் தற்போது வாடா ராசா என்ற பாடலுக்கு புடவையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது