#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அழகோ அழகு.. கியூட் ஸ்மைலில் இளசுகளை ஏங்கவைக்கும் கண்ணம்மா!! இந்த புகைப்படங்களை பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில் ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் ரோஷினி ஹரிப்ரியன். இந்த தொடரில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்து இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இந்த நிலையில் திடீரென சில காலங்களுக்கு முன்பு ரோஷினி, பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார். இவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் வந்ததால் அவர் விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரோஷினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அழகழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.