மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர் வாழ்ந்த வீட்டை பிக்பாஸ் சரவணன் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள் - அவரே கூறிய தகவல்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றபட்டார்.
தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சரவணன் அவரது பெற்றோர் நினைவாக வைத்திருந்த வீட்டை விற்றுவிட்டேன். அதற்கு காரணம் அந்த வீட்டை பார்க்கும் போது என் பெற்றோர் நினைவு அதிகம் வருகிறது. அதனால் அந்த வீட்டை விற்று விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் வீட்டை விற்று அதில் வந்த பணத்தை கொண்டு கோவில் கட்டியுள்ளதாக கூறியுள்ளார். விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது என்றும் பேசியுள்ளார்.