மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லைமீறும் செயல்கள்! எங்களுக்கு இந்த ஐஷூ வேண்டாம்.! அவரது அம்மா எமோஷனல் பதிவு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் ஐஷூ.
ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த அவர் சக போட்டியாளரான நிக்சனுடன் நெருக்கமாகி ரொமான்ஸில் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஐஷூ குறித்து அவரது அம்மா வெளியிட்ட பதிவு இணையத்தில் பரவி வருகிறது.
அதில் அவர், எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாக இரு. இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம். உண்மை எது, பொய் எது என விரைவில் நீ உணர்வாய் என நம்புகிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.