மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. புதிதாக பூத்த ரோஜா போல ரசிகர்களை கட்டி இழுக்கும் பிக்பாஸ் ஜனனி.! வைரலாகும் கியூட் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் 21 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த அவர் தனது குழந்தைத்தனமான பேச்சாலும், செயலாலும் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் செல்லப்பிள்ளையாக பட்டாம்பூச்சியாக சுற்றித் திரிந்த ஜனனி நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தநிலையில் அவர் 50 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சியில் இருந்து பின் எலிமினேட் ஆனார். ஜனனிக்கென ஏராளமான ரசிகர்களும், ஆர்மியும் உருவானது. இந்த நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.
மேலும் ஜனனி விஜய்யின் தளபதி 67 படத்தில் அவரது தங்கையாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையில் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது புதிதாக பூத்த ரோஜா போல பிங்க் உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.