மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"முதல் படமே விஜயுடன்" அடுத்த எந்த திரைப்படத்தில் பிக்பாஸ் ஜனனி நடிக்க போகிறார் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஏழு சீசன்களை தாண்டி எட்டாவது சீசனாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் இலங்கை தமிழ் பெண்ணான ஜனனி என்பவர் கடந்த சீசனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் வெளிவந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது.
மேலும் முதல் படமே விஜயுடன் இணைந்து நடித்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தது. இந்நிலையில் தற்போது அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜனனி. படத்தின் பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.