மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனவு மாதிரி இருக்கு.. ஆனா உண்மை.! செம்ம ஹேப்பியில் பிக்பாஸ் ஜனனி! அவரே பகிர்ந்த வேற லெவல் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த அவர் தனது குழந்தைத்தனமான பேச்சால், செயலால் மக்கள் மத்தியில் நன்கு ரீச்சானார். அவருக்கென ஆர்மியும் உருவானது.
பிக்பாஸ் வீட்டில் செல்ல பிள்ளையான இவர் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், அவர் 70 நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். பின்னர் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து அவர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் ஜனனிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது.
இந்நிலையில் ஜனனி தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஜனனி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், "மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. நடிகர் விஜய்யுடன் நடித்தது கனவு போல் உள்ளது. ஆனால் அது உண்மை. இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. நடிகர் விஜய் போட்டோ வந்தவுடன் வெளியிடுகிறேன்" என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
.