#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.! வளைச்சு கட்டி பிரீ அட்வைஸ் கொடுத்த தனலட்சுமி.! வைரல் வீடியோ!!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் எலிமினேஷனும் நடைபெற்ற வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வந்த ஜி.பி முத்து தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோலார் மற்றும் கடந்த வாரம் ஷெரீனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது
அதில், Scratch Cardக்கான நேரம் என 1 லிருந்து 10 வரை எண்கள் கொண்ட பலகை உள்ளது. அதில் ஒரு தடியை கொண்டு பந்தை தள்ளிவிட, அது எந்த எண்ணில் விழுகிறதோ அதில் குறிப்பிடப்பட்டுள்ள டாஸ்கை போட்டியாளர்கள் செய்ய வேண்டும். அதன்படி தனலட்சுமிக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக அட்வைஸ் வழங்க வேண்டும் என வந்துள்ளது. உடனே அவர் விக்ரமன், அசீம், ராம் மற்றும் ஷிவின் ஆகியோருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.