சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
"ஏ.ஆர்.ரஹ்மான், அவரது ரசிகர்களை புறக்கணித்து வருவது மிக மோசமான செயல்!" விளாசும் ப்ளூ சட்டை மாறன்!

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையின் ஈ சி ஆர் சாலையில், தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி இடத்தில ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
முறையான பார்க்கிங் வசதி இல்லை எனவும், நிகழ்ச்சியைப் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை எனவும், உள்ளே சென்றவர்களுக்கு அமர இருக்கைகள் இல்லை எனவும், இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து வாங்கிய ரசிகர்கள், இந்த மோசமான அனுபவத்தால் ரஹ்மான் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த இந்நிகழ்வுக்குப் பின் ரஹ்மான் இந்த குளறுபடிக்கு தான் பொறுப்பேற்று, பணத்தை திரும்ப தருவதாக கூறினார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் வேலையும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், "ரசிகர்களின் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் அவர்களின் வலியை குணப்படுத்த முடியாது. உங்கள் ட்விட்டர் பக்கங்களில் கமெண்ட் செக்ஷனை முடக்கி ரசிகர்களை புறக்கணிப்பது மிக மோசமான செயல்" என்று காட்டமாக கூறியுள்ளார். சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் பதிவிட்ட ட்விட் பதிவில் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.