மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஓ ஜாதி வேற இருக்கா" கமலை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. "தக் லைப்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கமலின் 234ஆவது படமாகும். மேலும் படத்தின் டைட்டிலோடு கமலின் கதாப்பாத்திரம் குறித்த அப்டேட்டும் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட்ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரும் நடிக்கின்றனர். இதில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரில் கமல் நடிக்கிறார்.
இந்தப்பெயர் தேவர்மகன் படத்தின் சக்திவேல் மற்றும் நாயகன் படத்தின் வேலு நாயக்கரையும் இணைத்த கேரக்டரா என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். நாயகன் படத்திற்கு பிறகு கமல் மீண்டும் ஜாதி பெயரில் நடிப்பதை அவரது ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன், " விக்ரம் படத்தை ஹிட்டாக்குனதால இப்போ கமலும் கத்தி, துப்பாக்கி, போதைப்பொருள் னு கிளம்பிட்டாரு. இப்போ சாக்குமூட்டையை தலையில் சுத்தி கேங்ஸ்டர் ஆகிட்டாரு. ஓ இதில் ஜாதி வேற இருக்கா..?" என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார்.