ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் ஜெயக்குமார் இயக்க, நடிகர் சாந்தனு மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்தத் திரைப்படம் திரைப்படங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் கதை அரக்கோணம் பகுதியில் நடக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி இருந்து அமேசான் ப்ரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய ஓடிடிகளில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.