மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.. திருமணமான ஒரே வருடத்திலேயே எடுத்த விபரீதமுடிவு.! அதிர்ச்சியான திரையுலகம்.?
திருமணமான ஒரே வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகர். இந்த செய்தியை அறிந்து கன்னடத் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. கர்நாடக மாநிலம் நீலமங்களாவில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இளம் நடிகர் சம்பத் ஜெயராம்.
35 வயதான சம்பத் ஜெயராம் பிரபல கன்னட சீரியலான அக்னி சாட்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர். அந்தத் தொடரில் மிகச்சிறப்பாக நடித்ததன் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்திருந்தார். இத்தகைய நிலையில் கடந்த சில நாட்களாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையினால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சமீபத்தில் வெளியான 'ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டூடியோ' என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசபடாததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் பணப் பிரச்சனைகளால் அவதியுற்று வந்துள்ளார். இதனால் ஏப்ரல் 22ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று நீலமங்கலாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் எந்தவிதமான செய்தியும் வெளியிடவில்லை. அவரை நெருங்கிய நண்பரான ராஜேஷ் துருவா என்பவர் மட்டும் ட்விட்டரில் அவரது இறப்பு குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.