மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: டப்பிங் கலைஞர், கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு? புகழ் கலைஞர் கோவை குணா காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல மிமிக்கிரி கலைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகில் பிரபல மிமிக்கிரி கலைஞரும், ஸ்டாண்ட் அப் காமெடியாக வலம்வந்தவர் கோவை குணா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
அதேபோல, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும், மிமிக்கிரி டப்பிங் பணிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவரின் மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.