மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரையுலகமே அதிர்ச்சி.. பிரபல காமெடி நடிகர் போண்டாமணி காலமானார்.!
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் போண்டாமணி. இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல்வேறு காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கும் படியாக உள்ளது.
அதிலும் குறிப்பாக அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க, வாயில என்ன தக்காளி சட்னியா போன்ற நகைச்சுவை வசனங்கள் இன்றும் நினைவில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் போண்டாமணிக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.