#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தெய்வமகள் சீரியல் அண்ணியாருக்கு என்ன ஆச்சு? இனி சீரியலில் நடிப்பாரா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி. தெய்வமகள் சீரியல் அதில் நடித்த அனைவருக்குமே நல்ல வரவேற்பை பெற்றுதந்தது. குறிப்பாக சீரியலில் நாயகியாக நடித்த வாணி போஜனும், வில்லியாக நடித்த காயத்திரியும் மிகவும் பிரபலமானார்கள்.
ஒரு கட்டத்தில் காயத்ரி அண்ணியாருக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்ட தொடங்கினார்கள். அந்த அளவிற்கு அவர் பிரபலமானார். தெய்வமகள் தொடர் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சன் டீவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் மந்திரவாதியாக நடித்தார் காயத்ரி.
தற்போது நந்தினி சீரியலும் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து எந்த தொடரிலும் நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார் காயத்ரி. இதுபற்றி அவர் கூறுகையில் குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.