மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Demonte Colony 2: திகில் காட்சிகளில் மிரளவைக்கும் டிமாண்டி காலனி 2: நடுநடுங்கவைக்கும் டிரைலர் காட்சிகள் வெளியீடு.. லிங்க் உள்ளே.!
கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு உட்பட பலரின் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி.
பேய் படமாக உருவாகியிருந்த டிமாண்டி காலனி, ரூ.2 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.18 கோடியை கடந்து வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது.
அருள்நிதி, மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் முதல் பாகம் அதிரடி, திரில்லர் காட்சிகளால் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இப்படத்தின் டிரைலர் காட்சிகள் டிசம்பர் 16 அன்று இரவு 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.
தற்போது படத்தின் அசத்தல் டிரைலர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.