மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளிர் கல்லூரியில் கெத்துகாட்டிய துருவ் விக்ரம்.! மாஸாக என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா!!
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கினார். படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ் நடித்தார்.
படத்தின் வேலைகள் முடிந்து காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் படத்தின் இறுதி காப்பி எங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், மீண்டும் முதலில் இருந்து படத்தை வேறொரு இயக்குனர் வைத்து இயக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து அப்படம் ஆதித்ய வர்மா பெயரிடப்பட்டு, துருவ்விற்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்க, அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கினார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் துருவ் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு சென்றார். அப்பொழுது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்துள்ளனர்.
மேலும் துருவ் மாணவிகளுடன் கலகலப்பாக உரையாடி பின்னர் கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற , கல்யாண வயசு தான் என்ற பாடலை பாடியுள்ளார். அவர் பாட மாணவிகள் கூச்சலிட்டு கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.