மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனைவி யார் தெரியுமா? வெளியான புகைப்படம்!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஓன்று. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அவதாரம் எடுத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
பீட்ஸா வெற்றியை தொடர்ந்து சித்தார்த்தை வைத்து ஜிகர்த்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்த்தண்டா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இறைவி படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ்.
இறைவி படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. அதன்பின்னர் நீண்ட காலமாக படம் இயக்காமல் இருந்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியுள்ளார். பேட்ட படம் வரும் பொங்கலை முன்னிட்டு, நாளை ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பேட்ட படம் ஹிட் ஆகி விட்டால், கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிடுவார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல் அவரது மனைவி, மற்றும் குடும்ப புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.