#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இயக்குனர் சிவா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்..
இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சிறுத்தை சிவா. சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர் முதன் முதலாக சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான சிறுத்தை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து முதல் படத்திலையே பிரபல இயக்குனராக மாறினார் சிவா.
அதன் பயனாக அஜித்தை இயக்கம் வாய்ப்பு அவருக்கு கிடைத்து. வீரம் படத்தில் தொடங்கி விஸ்வாசம் வரை தொடர்ந்து நான்கு படங்களை அஜித்தை வைத்து இயக்கி மெகாஹிட் கொடுத்தார் சிவா. இதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கிவந்தார் சிவா. கொரோனா தொற்று, ஊரடங்கு போன்ற காரணங்களால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் சிவாவின் தந்தை ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் வசித்துவந்தநிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 72 வது வயதில் உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் சிவாவின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
திரைத்துறையினரும், உறவினர்களும், ரசிகர்களும் சிவாவின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.