மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகராக புதிய அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்... அதுவும் யார் படத்தில் தெரியுமா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் 'ட்ரெயின்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
ரயில் பயணத்தை மையமாக கொண்டு உருவாகும் ட்ரெயின் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய தகவலாக ட்ரெயின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல சூப்பர் ஹூட் படங்களை இயக்கிய வெற்றிமாறனை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.